இங்கு 100 கோடிக்கு மேல் பணம் இரைத்து தவறான படங்களை ஏன் எடுக்கிறீர்கள் என்று கேட்க ஆள் இல்லை… போஸ் வெங்கட் ஆவேசம்

 



நடிகர்-இயக்குனர்-போஸ் வெங்கட் ஆவேசம்

 

 

போஸ் வெங்கட் அவர்கள் தனது 17 வது வயதில் சென்னையில் குடியேறினார் தொடக்க காலத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். பிறகு தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்து மெட்டிஒலி தொடரின் மூலம் இவர் பரவலாக பிரபலமடைந்தார். பின்னர் பாரதிராஜாவின் ஈரநிலம் படத்தில் நடித்தார், அது மட்டும் இல்லாமல் இவர் சிவாஜி, மருதமலை, தாம் தூம், சரோஜா, என பல படங்களில் நடித்துள்ளார்.

 

மலையாள திரையுலகத்திலும் மம்மூட்டி திலிப்புடன் பல படங்கள் நடித்துள்ளார், 2020 ஆம் ஆண்டு வெளியான கன்னி மாடம் என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறியப்பட்டார். இவர் சமிபத்தில் சமுகவளைதலத்தில் தற்போது வரும் படங்களை பற்றி பரபரப்பான கருத்தை பதிவிட்டுள்ளார். பின்வருமாறு....

 

 

எங்கும் நசுக்கப்படுவது தான் ஏழ்மை,, இங்கு 100 கோடிக்கு மேல் பணம் இரைத்து தவறான படங்களை ஏன் எடுக்கிறீர்கள் என்று கேட்க ஆள் இல்லை… மக்களுக்கு பிரயோஜனமான தேவையான அவசியமான திரைப்படங்களை தராமல் தன் கஜானாக்களை மட்டும் நிரப்பும் திரைப்படங்களை எடுக்கும் கார்ப்பரேட்டுகளை கேள்வி கேட்காமல்,பணத்தைக் கருத்தில் கொள்ளாமல் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு வரும் தயாரிப்பாளர்களை தடுத்து நிறுத்துவது, இங்கு இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வு, சாதியக் கொடுமை, மன ரீதியான பிரச்சனைகள் ஆகியவற்றை சினிமாக்களாக அறிவுரைகளாக அக்கறையுடன் சொல்லும் அருமையான சிறு திரைப்படங்களை தடுப்பது என்பது ஒரு விதமான பாசிச மனப்பான்மை… தமிழகத்தில் தடுக்கப்பட வேண்டிய சினிமா என்பது, எடுக்க கூடாத சினிமா என்பது, யாருக்கும் உபயோகமில்லாமல்,எந்தவித பயனையும் எந்த மக்களுக்கும் அளிக்காமல், வெறும் பாக்கெட்டை நிரப்பும் சினிமாக்கள், மொத்தம் 4 பேர் பணத்தை எடுத்துக் கொண்டு பிரித்துச் செல்லும் அந்த புத்திசாலிகள்,,,,. அவர்களைத் தான் தடுத்து நிறுத்த வேண்டும் மாறாக சிறிய பட்ஜெட் என்று வெறுமனே வார்த்தைகளை பயன்படுத்தி நல்ல திரைப்படங்களை தடுப்பது என்பது நம் தமிழ் சினிமாவிற்கு நாமே தன் தலையில் மண்ணள்ளி கொட்டுவதற்கு சமம்… இந்த பாசிச எண்ணம் யாரிடம் இருந்தாலும் அது தவறு… போஸ் வெங்கட் (நடிகர்-இயக்குனர்)








SARA

When the world feels heavy, it's easy to question whether it's worthwhile to have faith in humanity. Our team of journalists spends each day look at the day's most heartbreaking news stories — but as a positive news media company, we do things a bit differently.

Post a Comment

Previous Post Next Post
;