நடிகர் ரஜினிகாந்தை மிரட்டிய வாட்டாள் நாகராஜ் கர்நாடகாவிற்குள் கால் வைக்கக் கூடாது

நடிகர் ரஜினிகாந்துக்கு மிரட்டல்

காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி நீர் திறக்க வேண்டும் என காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.



 ஆனால் கர்நாடக அரசு தங்களிடம் போதுமான நீர் இல்லை என்று காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது. என திட்டவட்டமாக அறிவித்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில்  முறையிட்டது, அதே போன்று காவேரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு ரத்து செய்ய கோரி கர்நாடகா அரசும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.


 இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அவர்கள் இரண்டு தரப்பு மனுக்களையும் நிராகரித்தார் மேலும் காவேரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது, எனவும் கூறியது. இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறந்து விடுவதாக அம்மாநில துணை முதலமைச்சர் டி .கே .சிவக்குமார் தெரிவித்துள்ளளார். 


போராட்டதிற்க்கு அழைப்புவிடுத்த வாட்டாள்நாகராஜ்

இன்நிலையில் தமிழ்நாட்டுக்கு நீர் திறப்பதை கண்டித்து  வாட்டாள் நாகராஜ் அம்மாநிலத்தில்  முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளார், அதுமட்டுமின்றி   கர்நாடகத்தில் தமிழ் படங்களை ஓட விடமாட்டோம்,எனவும் ரஜினிகாந்த், கர்நாடகாவுக்குள் நுழையக்கூடாது, என்றும் வாட்டாள் நாகராஜ்  கர்நாடகத்தில் எத்தனை தமிழர்கள் இருக்கிறார்களோ அவர்களை காவிரி தண்ணீர் குடிக்க வேண்டாமா? எனவும் அப்படி இல்லை என்றால் தமிழர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்துக் கொள்ளுங்கள்  லாரிகள் மூலமாகவோ, பஸ்கள் மூலமாகவோ, என்றும் பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்,.


இந்நிலையில் அம்மாநில துணை முதலமைச்சர் டி .கே .சிவக்குமார்  அவர்கள் முழு அடைப்பு போராட்டத்தை உடனடியாக திரும்பப்பெறுமாறு அறிவுறுத்துள்ளார், பொது முடக்கத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரை எச்சரித்துள்ளார். 



SARA

When the world feels heavy, it's easy to question whether it's worthwhile to have faith in humanity. Our team of journalists spends each day look at the day's most heartbreaking news stories — but as a positive news media company, we do things a bit differently.

Post a Comment

Previous Post Next Post
;