மகளிருக்கு உரிமை 1000 ஆயிரம் மட்டும் இல்லை? இன்னும் 10 திட்டம் இருக்கு

 


தாய் வீட்டு சீதனம்

மகளிருக்கு உரிமை தொகை ஆயிரம் மட்டும் இல்லை? இன்னும் 10 திட்டம் இருக்கு


இன்று முதல் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்க உள்ள நிலைகள் கடந்த 2 அரை ஆண்டு கால திமுக ஆட்சியில் மகளிருக்காக கொண்டுவரப்பட்ட10 திட்டங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்

2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றதும் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்ட முக்கிய கோப்புகள்

1, இலவச பேருந்து பயணத் திட்டம் தமிழக மகளிர் நலன் கருதி முதல்வர் அறிவித்த இந்த திட்டம் தமிழகத்தில் மட்டும் இன்றி பல மாநிலங்களின் வரவேற்பை பெற்றது.

2, குடும்ப சூழல் மற்றும் வறுமையால் பெண் குழந்தையின் உயர்கல்வி கனவு தடைபட்டு விடக்கூடாது என்பதற்காகவே கொண்டுவரப்பட்ட திட்டம் தான், புதுமைப்பெண் திட்டம். இந்தத் திட்டத்தின் படி அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு உயர்கல்வி பயில மாதம் 1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

3, தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் மகளுக்கு சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகையை 31, 3, 2021 நிலவரப்படி நிலுவையில் இருந்த 2756 கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்தது.

4, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதி முன்னெடுத்த நிலையில் பெண்களும் அர்ச்சகராகலாம், என அறிவித்ததோடு முதல் பெண் அர்ச்சகராக சுகாசனா என்பவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் நியமித்தார். கருசுமக்கும் பெண்களின் குரல்களும் கருவறைக்குள் ஒளிக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.

5, பெரும் வரவேற்பை பெற்றது தாய்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து மகளிருக்கான ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பை ஒன்பது மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி அறிவித்த தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்து.

6, சாலை பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை நியமிக்க வேண்டாம் என்று காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியது பெண் காவலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

7, இன்று உள்ளாட்சி பிரதிநிதிகளாக 50 சதவீத பெண்கள் பொறுப்பில் இருப்பதற்கு காரணம் திமுக அரசு கொண்டு வந்திருந்த உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு

8, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து உட்கோட்டங்களிலும்  மகளிக்கு காவல் நிலையம் அமைக்கும் திட்டமும் இந்த ஆட்சியில் தொடங்கப்பட்டுள்ளது.

மகளிருக்கு உரிமை தொகை ஆயிரம் மட்டும் இல்லை? இன்னும் 10 திட்டம் இருக்கு

9, தமிழ்நாடு அரசு சார்பில் வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு குறைந்த விலையில் பல மாவட்டங்களில் அரசு மகளிர் விடுதிகள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

10, இன்று முதல் தமிழகம் முழுவதும் சுமார் ஒரு கோடியே 6 லட்சம் மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகைய திட்டம் தொடங்கப்பட உள்ளது.

SARA

When the world feels heavy, it's easy to question whether it's worthwhile to have faith in humanity. Our team of journalists spends each day look at the day's most heartbreaking news stories — but as a positive news media company, we do things a bit differently.

Post a Comment

Previous Post Next Post
;